இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய கடற்படையினர்!
#SriLanka
Dhushanthini K
9 months ago

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'INS Vela' என்ற நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. 67.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 53 பணியாளர்கள் உள்ளனர்.
'ஐஎன்எஸ் வேலா' என்ற நீர்மூழ்கிக் கப்பல் வரும் 13ம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளது.
அப்போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளில் அதன் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்திய கடற்படையினர் குழு நாட்டின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக பல பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.



