டிட்வா சூறாவளியால் சிலாபம் வைத்தியசாலையில் மூன்று வைத்தியசாலைகள் முற்றாக சேதம்!
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவில், சிலாபம் அடிப்படை மருத்துவமனை, மஹியங்கனை மற்றும் வத்தேகம மருத்துவமனைகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
மேலும் சுமார் 100 சிறிய மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சிலாபம் மருத்துவமனை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு உள்ள CT ஸ்கேன் இயந்திரம் உட்பட முக்கிய மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்ததாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போது அங்கு பகல்நேர வெளிநோயாளி (OPD) சேவைகள் மற்றும் அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படுகின்றன.
வத்தேகம , மஹியங்கனை மருத்துவமனைகளும் சேதமடைந்த நிலையில், வத்தேகம மருத்துவமனையில் இருந்த அனைத்து நோயாளிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இம்மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்களில் எதை மீட்கலாம் என்பதை கணக்கிட மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மொத்த சேதத்துக்கு இதுவரை முழுமையான நிதியியல் மதிப்பீடு செய்யப்படவில்லை. இருப்பினும் உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த அவசரநேரத்தில் தேசிய சுகாதார மேம்பாட்டு நிதிக்கு ரூ. 53 மில்லியன் வழங்கியுள்ளது.
பேரழிவுக்குப் பிறகு நலன்புரி மையங்களில் தங்கியிருக்கும் மக்களின் சுகாதாரத் தேவைகளை தொடர்ந்து மதிப்பிட்டு, அவற்றை பூர்த்தி செய்ய சுகாதார அதிகாரிகள் பணி செய்து வருகின்றனர் என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
