ஈரான் - அமெரிக்கா இடையில் நாளை சந்திப்பு!

#SriLanka #Meeting #America #Iran #Oman
Thamilini
4 months ago
ஈரான் -  அமெரிக்கா இடையில் நாளை சந்திப்பு!

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நாளைய தினம் ஓமானில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில்  அதிகரித்து வந்த பதற்றங்களை தணிக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடுகளை ஓமான் மேற்கொண்டிருந்தது. 

இதற்காக ஓமானுக்கு நன்றி கூறுவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார். 

இதேவேளை இந்த தகவலை ட்ரம்ப் நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4