ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் ‘டொக்ஸிக்’ திரைப்பட ட்ரெய்லர்!
#India
#Cinema
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 month ago
நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டொக்ஸிக்’ (Toxic) திரைப்படத்தின் உத்தியோகபூர்வ ட்ரெய்லர் நேற்று (08) வெளியானது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரவி பஸ்ரூர் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Pan-India திரைப்படமாக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் 26ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.