இனவாதம் மற்றும் அடிப்படை வாதத்திற்கு இடமளியோம் - ஜனாதிபதியின் சுதந்திர தின உரை!

#SriLanka #Independence #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
இனவாதம் மற்றும் அடிப்படை வாதத்திற்கு  இடமளியோம் - ஜனாதிபதியின் சுதந்திர தின உரை!

நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது. 

ஒற்றுமையிலேயே மனித வளத்தின் வெற்றி தங்கியுள்ளது. நாம் பிளவுப்பட்டால் ஒற்றுமையின் பலம் தெரியவராது. இலங்கையில் இரு மொழிகள் உள்ளன. அடையாளம் மற்றும் கலாச்சாரம் உள்ளது. 

எனவே ஒவ்வொரு இனக் குழுக்களின் கலாச்சாரம், மற்றும் உரிமைகள் ஏற்கப்பட வேண்டும். இனவாதம் மற்றும் அடிப்படை வாதம் மூலம் அழிவே ஏற்படுகிறது. எனவே இனவாதம் மற்றும் அடிப்படை வாதத்திற்கு நாம் இடமளியோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!