பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் கிஷோர்
கடந்த 2007ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' படத்தில் வில்லன் கதாபாத்திரல் நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகர் கிஷோர்.
இப்படத்தை தொடர்ந்து 'ஜெயம் கொண்டான்', 'வெண்ணிலா கபடிக்குழு', 'விடுதலை', 'வேட்டையன்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில், நடிகர் கிஷோர் தற்போது பிரதமர் மோடி குறித்து பேசியுள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "வாழ்க்கையில் பின்னால் போகும் வாய்ப்பு இருந்தால் 2014ம் ஆண்டுக்கு சென்று பிரதமரை மாற்றிவிடுவேன்.
இந்தியாவே மாறியிருக்கும். நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. வெறுப்புணர்வு நாட்டில் அதிகம் இருக்கிறது. இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும்.
வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள். அன்பு இல்லை என்றால் இங்கே எதுவுமே இருக்காது," என்று கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )