நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்!
#SriLanka
Thamilini
1 year ago
நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் விசேட பிரிவு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட உள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். வரும் 12ம் திகதிமுதல் யூனிட் பணிகள் துவங்க உள்ளது என்றார்.
இதன்படி, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும், தேர்தலுக்குப் பின்னரும் 05 நாட்களுக்கு தேர்தல்கள் செயலாளர் நாயகம் அலுவலகத்துடன் இணைந்து இந்த விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக திரு.பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்தார்.