அம்பலாங்கொடையில் பெண் உள்பட இருவர் சுட்டுக் கொலை!
#SriLanka
#GunShoot
Dhushanthini K
9 months ago

அம்பலாங்கொடை, உரவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பெண்ணும் ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அம்பலாங்கொட, குளிகொட பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய தம்பதியரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பெண் மற்றும் ஆண் இருவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய விசாரணையின் படி T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



