மண்வெட்டியால் தாக்கி பெண் ஒருவர் படுகொலை!
#SriLanka
Thamilini
1 year ago
தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் பெண் ஒருவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
நேற்று (09) மாலை இச்சம்பவம் ஈச்சங்குளம் அம்மிசைத்தியன் பகுதியில் பதிவாகியுள்ளது.
அம்மிச்சைத்தியன், ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.