ஹிக்கடுவயில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பயணித்த பெண் உயிரிழப்பு!

#SriLanka #Train
Dhushanthini K
9 months ago
ஹிக்கடுவயில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பயணித்த பெண் உயிரிழப்பு!

ஹிக்கடுவ, அமரசேன மாவத்தை பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். 

 நேற்று (09.11) மாலை காலியில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்துள்ளார். 

 உயிரிழந்தவர் வல்பிட்டிமுல்ல, தெவலபொல பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவராவார். 

 பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!