பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!

#SriLanka #landslide
Dhushanthini K
9 months ago
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் பதுளை, பசறை, ஹாலிஎல, பததும்பர, கண்டி மாவட்டம், தும்பனை, உடுதும்பர, யட்டிநுவர, பஹடஹேவஹத்த மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பதுளை மாவட்டத்தில் ஹல்தும்முல்லை, வெலிமடை, லுணுகல, பண்டாரவளை, கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, தெல்தோட்டை கேகாலை மாவட்டத்தில் கேகாலை, தெஹிம்பிவிட்ட, புளத்கொஹுபிட்டிய, வரகாபொல, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, தரணிகல, அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கூடா, மாவட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு முதல் நிலை எச்சரிக்கை விடுத்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!