மன்னாரில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு!
#SriLanka
#Mannar
Dhushanthini K
9 months ago

மன்னார் மாவட்டத்தில் முதல்முறையாக வுஷூ (Wushu) விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டு மூன்று நாள் பயிற்சி முகாம் இடம் பெற்று வருகிறது.
மன்னார் பொது விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (8) தொடக்கம் நாளை (10.11) வரை இடம்பெறும்.
குறித்த பயிற்சி முகாமில் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் 50 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த விளையாட்டு நிகழ்வானது அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலோடு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் நிதி பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



