தாமரை கோபுரத்தில் துப்பாக்கிச்சூடு!
#SriLanka
Thamilini
1 year ago
தாமரை கோபுரத்தில் நேற்று (09.11) துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் இசைக் குழுவுடன் தொடர்புடைய தனியார் பாதுகாப்பு அதிகாரி காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர் அல்லது நபர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் இசை நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவில் இருந்தவர் என்றும், கோபுர நிர்வாகத்துடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் லோட்டஸ் டவர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.