மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக சர்வதேசதில் முதலிடம் பிடித்த இலங்கை

#SriLanka #Tourism
Mayoorikka
9 months ago
மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக சர்வதேசதில்  முதலிடம் பிடித்த  இலங்கை

லண்டனில் நடைபெற்ற வொன்டர்லஸ்ட் ரீடர் டிரவல் (Wanderlusr Reader Travel Awards - 2024) விருதுகள் விழாவில் உலக சுற்றுலாப்பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 இந்த விருதுகளில் இலங்கையானது மிகவும் விரும்பத்தக்க தீவுக்கான தங்க விருதை வென்றுள்ளது. கடந்த வருடம் இந்தப் போட்டியில் எட்டாவது இடத்திலிருந்த இலங்கை இவ்வாண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

 இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளால் வாக்களிக்கப்பட்டு இந்த விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது. 

மேலும் அவுஸ்திரேலியா மிகவும் விரும்பத்தக்க நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், டோக்கியோ மிகவும் விரும்பத்தக்க நகரம் என்ற விருதையும் பெற்றுக் கொண்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!