இலங்கையர்களை பாதுகாக்க துரித கதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை பாராட்டும் இஸ்ரேல்!
#SriLanka
#Israel
Dhushanthini K
9 months ago

இஸ்ரேலியர்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள துரித நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, இலங்கை அரசாங்கத்திற்கு இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு பாராட்டு தெரிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அறுகம்பே பிரதேசத்தில் உள்ள இஸ்ரேலியர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்த உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை பாராட்டுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் பிரிவின் தலைவர் அவிவ் எஸ்ட்ரா, இஸ்ரேலிய தூதுவர் நிமல் பண்டாரவை சந்தித்த போது இலங்கை அரசாங்கத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.



