மீண்டும் பரவும் கொரோனாத் தொற்று: யாழில் பெண் ஒருவர் மரணம்
#Corona Virus
#SriLanka
#Jaffna
Mayoorikka
1 year ago

நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.



