திரை நட்சத்திர கிரிக்கெட் தொடர் - சென்னை அணியின் பெயர் மாற்றம்
#Actor
#TamilCinema
#Cricket
#Chennai
#Movie
#celebrity
Prasu
1 hour ago
இந்தியாவில் 8 அணிகள் கொண்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் லீக் தொடர் வருடம் தோரும் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார். இதன் நிறுவனர் கங்கா பிரசாத்.
சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, ஷாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே. சத்யா, தாசரதி, ஷரவ் உட்பட பல நட்சத்திரங்கள் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை ரைனோஸ் அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா வாங்கியுள்ளனர்.
மேலும், சென்னை அணியின் பெயரை VELS CHENNAI KINGS என பெயர் மாற்றப்படுவதாக ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கேப்டன் ஆர்யா உட்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே )