கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை
#Cinema
#Accident
#Actress
#Bollywood
Prasu
1 hour ago
பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி, மும்பையில் ஒரு கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பியுள்ளார்.
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள லிங்க் ரோடில், இசை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த போது மது போதையில் அதிவேகமாக காரில் வந்த ஒரு நபர், நோராவின் கார் மீது மோதியுள்ளார்.
இந்த மோதலின் வேகத்தில் நோரா காரின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குத் தூக்கி எறியப்பட்டார். அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய வினய் சக்பால் என்ற நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
(வீடியோ இங்கே )