இலங்கைக்கு வரும் டொலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Dollar
Mayoorikka
1 year ago
இலங்கைக்கு வரும்  டொலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 1,536.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 1,432.2 மில்லியன் டொலர்களாகும்.

 இதேவேளை, சுற்றுலா பயணிகளின் வருகையும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 89.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.

 இதற்கமைய சுற்றுலா வருகையின் மூலம் கிடைத்த வருவாய் 1,025.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!