டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!
#SriLanka
#Hospital
#Dengue
Mayoorikka
1 year ago

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,028 ஆக பதிவாகியுள்ளது.
அதிகமான டெங்கு தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,527 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மேல் மாகாணத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



