இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!
#SriLanka
#Bus
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்புவதற்காக இன்று (15.04) மற்றும் நாளை (16.04) விசேட பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப அந்த பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்தார்.
இதேவேளை, ரயிலில் வரும் பயணிகளின் வசதிக்காக சில விசேட ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இடிபோலகே தெரிவித்தார்.



