VAT சான்றிதழ் காட்சிப்படுத்தப்பட வேண்டும்; நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

#SriLanka #taxes #Lanka4 #money #Finance #Vat
Mayoorikka
1 year ago
VAT சான்றிதழ் காட்சிப்படுத்தப்பட வேண்டும்; நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

வருடாந்தம் 80 மில்லியன் ரூபா இலாபமீட்டும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் பெறுமதி சேர் வரியில் (VAT) பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் அனைவரும் பார்க்கும் வகையில் VAT பதிவு சான்றிதழ் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 VAT செலுத்துவதற்கான வரம்பு தற்போது ரூ. 80 மில்லியன் ஆக இருந்தாலும் விரைவில் ஆண்டுக்கு 60 மில்லியன் ரூபாய் என அதைக் குறைக்க தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என இன்று காலை யட்டியந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்தார்.

 VAT பதிவு இலக்கம் காட்சிப்படுத்தப்படாவிட்டால், அவ்வாறு செய்யாதவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!