அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள்!

#SriLanka #strike #Lanka4 #union #Tamilnews #sri lanka tamil news #University
Thamilini
1 year ago
அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள்!

ஒரு தரப்பினருக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (18) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

 இதன் காரணமாக பல்கலைக்கழக அமைப்பில் உள்ளக சிக்கல்கள் உருவாகி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தொழிற்சங்கங்கள், “பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு தரப்பினருக்கு மட்டும் 25% கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படுகிறது. 

கல்வி அல்லாதவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தை அதிகரிக்கப்போனால் அனைவருக்கும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கேட்கின்றனர். இந்த நெருக்கடியை அரசே உருவாக்கியுள்ளது. 

இன்று அடையாள வேலைநிறுத்தம் நடக்கிறது. அதற்கும்  செவிசாய்க்கவில்லை என்றால் அனைத்து பல்கலைகழகங்களையும் மூடி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்துள்ளனர். “

இதன்படி 23 தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பொது மாநாட்டின் இணைச் செயலாளர்  கே.எல்.டி.ஜி.ரிச்மண்ட் தெரிவித்தார். 

இதேவேளை, வைத்தியர்களின் DAT கொடுப்பனவு 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச தாதியர் சங்கம் நேற்று (17) ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை 7.00 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!