தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்: அதிபர்கள் எச்சரிக்கை

#SriLanka
Mayoorikka
1 year ago
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்: அதிபர்கள் எச்சரிக்கை

புதிய சேவை யாப்பு காரணமாக அதிபர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அதிபர்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

 இந்த வாரம் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 "பதவி உயர்வு மற்றும் சம்பளத்தை இழந்தவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான அவதானத்தை செலுத்துமாறு கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம். அமைச்சரவை பத்திரம் மூலம் இதற்கு தீர்வு காண்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். 

அடுத்த வாரம் புதன் கிழமை அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என அண்மையில் நாம் நடத்திய கலந்துரையாடலில் அமைச்சர் உறுதியளித்தார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். இல்லை என்றால் அனைத்து அதிபர்களையும் கூட்டி தீவிர நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம" என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!