மக்கள் வெள்ளம் அலை மோத தியாகி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்! ஆறு கோடி பெறுமதியான உதவித் திட்டம்
தியாகி அறக்கொடை நிறுவனர் தியாகேந்திரன் வாமதேவா அவர்களின் 73 ஆவது பிறந்ததினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள TCT வளாகத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.
பிறந்தநாளினை முன்னிட்டு ஆறு கோடி பெறுமதியான உணவுப் பொதிகள் வறிய மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக நாவலர் வீதியில் குவிந்த வண்ணமிருந்ததை அவதானிக்க முடிந்தது. நாவலர் விதியை மூடுமளவிற்கு மக்கள் வெள்ளம் அலை மோதியிருந்தது.

நல்லூர் திருவிழாவை அடுத்து இவருடைய பிறந்த நாள் அன்று பெருமளவான மக்கள் கூடியிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. வறிய மக்களுக்கு உணவுப் பொதிகள் உட்பட பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை சில மக்களுக்கு வாழ்வாதார நிதி உதவிகளும் மாரக் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை தியாகி அவர்களுடைய பிறந்தநாளினை முன்னிட்டு நாவலர் வீதி முழுவதும் அவருடைய பதாதைகள் வைக்கப்பட்டிருந்து அவ் வீதி ஒரு திருவிழாவினைப் போல் காட்சியளித்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

