தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

#TamilCinema #rajini kanth #M.K.Stalin
Prasu
2 hours ago
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்திற்கு தி.முக. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அந்த பதிவில்,"ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம், மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்! ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, "என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!