மட்டக்களப்பில் மாபெரும் பேரணி - பொலிஸாரின் தடைகளையும் மீறி முன்னேறிய மக்கள்!

#SriLanka #Batticaloa #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
மட்டக்களப்பில் மாபெரும் பேரணி - பொலிஸாரின் தடைகளையும் மீறி முன்னேறிய மக்கள்!

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை  முன்னிட்டு  மட்டக்களப்பு - கல்லடிப்பாலத்திற்கு அருகிலிருந்து மாபெரும் பேரணி ஒன்று ஆரம்பமாகியது. 

இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டுள்ளோர் பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ​

images/content-image/1770210290.jpg

பேரணியின் போது போராட்டக்காரர்களைத் தடுப்பதற்காக பொலிஸார் வீதித் தடைகளைப் பயன்படுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான முறுகல் நிலையும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பொலிஸாரின் தடைகளை மீறி மக்கள் ஆவேசமாக முன்னேறியதால் மட்டக்களப்பு நகரின் பிரதான வீதிகளில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியதாகவும் அவர் மேலும் கூறினார். 

images/content-image/1770225846.jpg

இதேவேளை இந்த  கவனயீர்ப்புப் பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர்  சிறிநாத், ஸ்ரீநேசன் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

images/content-image/1770225912.jpg

images/content-image/1770226001.jpg

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4