08 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்!

#SriLanka #Police #Transfer
Thamilini
2 hours ago
08 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்  உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடன் அமலுக்கு வரும் வகையில் 08 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய 

பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஈ.எம்.ஜி.ஜே. சேரம்: காலி பிரிவிலிருந்து, ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.சி.ஏ. புஷ்பகுமார: காலி பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

 இடமாற்றம் பெற்றுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் வருமாறு, 

 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.ஈ.எல். பெரேரா: கம்பளைப் பிரிவிலிருந்து கொழும்பு வடக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.என். குணவர்தன: மொனராகலைப் பிரிவிலிருந்து பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 

 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.ஆர். புஷ்பகுமார: கொழும்பு வடக்கு பிரிவிலிருந்து விசேட விமான நிலையப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ. உதய குமார: வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து களுத்துறைப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எம்.எஸ்.பி. விக்ரமசிங்க: பொலிஸ் தலைமையகத்தின் மேலதிக தலைமையக நிர்வாகப் பணிப்பாளராக இருந்து, மொனராகலைப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!