நித்தியானந்தாவின் கைலாசாவை தனிநாடாக அங்கீகரித்தது அமெரிக்கா -புதிய ஒப்பந்தமும் கையெழுத்தானது‼️

#world_news #America #Country #United_States #Nithyananda #Kailasa
Nila
2 years ago
 நித்தியானந்தாவின் கைலாசாவை தனிநாடாக அங்கீகரித்தது அமெரிக்கா -புதிய ஒப்பந்தமும் கையெழுத்தானது‼️

கைலாசா குறித்து தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு வந்த சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, தற்போது கைலாசா-அமெரிக்கா இடையே இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் அமெரிக்கா கைலாசாவை அங்கீகரித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நீயூ ஜெர்சியில் உள்ள நெவார்க் நகர மண்டபத்தில் கடந்த 11ஆம் திகதி  இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்காவின் மரபுபடி அந்நாட்டுடன் வேறு ஒரு நாடு ஒப்பந்தம் மேற்கொள்கிறது எனில் அந்நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் பாடப்படும். அந்த வகையில் நெவார்க் நகர மண்டபத்தில் கைலாசாவின் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா சிறுவயது முதல் ஆன்மீகத்தில் கொண்ட நாட்டம் காரணமாக பிரபலமான சாமியாராக உருவானார். இந்நிலையில் தமிழ்நாட்டின் மிக பழமையான சைவ மடாலயங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு முன்பிருந்தே பலர் இறைப்பணியாற்றி வந்திருந்த நிலையில் இவரை இளைய பீடாதிபதியாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த அறிவிப்பை ஆதீனத்தின் 292வது மடாதிபதியான ஸ்ரீ அருணகிரிநாதர் திரும்ப பெற்றுக்கொண்டார். அதிலிருந்து பஞ்சாயத்து கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கியது. இளைய பீடாதிபதி குறித்த அறிவிப்பை வாபஸ் பெற்ற அருணகிரிநாதர், அதே ஆண்டில் திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தர மூர்த்தி சுவாமிகளை இளைய ஆதினமாக அறிவித்தார். 
இதனையடுத்து நித்தியானந்தா மதுரை மடத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் நடிகையுடன் இவர் தனிமையில் இருந்த வீடியோ வெளியானது இவர் மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது. மட்டுமல்லாது ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்கும் இவர் மேல் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பக்தர்களுக்கு நேரில் காட்சியளிக்காமல் ஆன்லைன் வழியாகவே சத்சங்கம் மேற்கொண்டு வந்திருந்தார். இதனையடுத்து கைலசா எனும் புதிய நாட்டை வாங்கி விட்டதாகவும் இது இந்துக்களின் புனித பூமியாக இருக்கும் எனவும் கூறி திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இதனை பலரும் நம்பவில்லை. நம்பியவர்கள் இந்நாடு எங்கு இருக்கிறது என்று கேட்க தொடங்கினர். பல நாட்கள் இது குறித்த மர்மம் நீடித்து வந்த நிலையில், அவர் தனி நாடு கோரி ஐநாவில் விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

அவர் தென் பசிபிக் கடல் பகுதியையொட்டியுள்ள ஒரு தீவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் சிலர் இவர் கரீபியன் கடலில் உள்ள தீவுகளில் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். 

இந்நிலையில்தான் அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடன் கைலாசா சார்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி தொற்றுநோய், சிக்கலான மனநலப் பிரச்சனைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை இரு நகரங்களும் சேர்ந்து தீர்வு காணும். 

இந்த நிகழ்ச்சியில் ஐ.நாவுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா மற்றும் நெவார்க் நகர மேயர் பராக்கா ஆகியோர் பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!