சீனாவுடனான உறவை ஆழப்படுத்த விரும்பும் இலங்கை!
சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் சீனாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இலங்கை தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
உலகளவில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் அதிக நன்மைகளை வழங்கும் வகையில், சீனாவுடனான உறவுகளை விரிவுபடுத்த இலங்கை ஆர்வமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சீனாவுடனான நடைமுறை ஒத்துழைப்புக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், சீனாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மிகவும் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வறுமைக் குறைப்பு, அறிவியல் முன்னேற்றம் மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகியவற்றில் சீனாவின் சாதனைகள் நீண்டகால திட்டமிடல் மற்றும் கொள்கை தொடர்ச்சியின் மதிப்பை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
