இந்திய பிரதமருக்கு அழைப்பிதழ் வைத்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி

#PrimeMinister #Actor #Actress #TamilCinema #wedding #NarendraModi #L4
Prasu
3 months ago
இந்திய பிரதமருக்கு அழைப்பிதழ் வைத்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்ததன்மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக மாறியவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.

ஜனவரி தொடக்கத்திலிருந்தே இவர்களின் திருமணம் தொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஐடிசி மெமென்டோஸ் ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்றது. 

விஜய் தேவரகொண்டா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கு பாரம்பரியப்படியும், ராஷ்மிகா கர்நாடகாவின் குடகு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்ப முறைப்படி கொடவா பாரம்பரியப்படியும் என இருமுறை திருமணச் சடங்குகள் நடைபெற்றது.

இந்நிலையில், வருகிற 4ம் தகுதி நடைபெற உள்ள திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே டெல்லியில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்திற்கு சென்ற இருவரும் சிறிது நேரம் உரையாடி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

இதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4