தனது தளபதிக்காக நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத்
#Tamil Nadu
#Actor
#TamilCinema
#Lanka4
#Vijay
#ChiefMinister
#L4
Prasu
2 weeks ago
கடந்த பல வருடங்களில் தமிழ் திரையுலகில் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது விஜய் மற்றும் அனிருத் ஆகும்.
பல மறக்க முடியாத பாடல்களையும் பின்னணி இசைகளையும் ரசிகர்களுக்கு இந்த கூட்டணி வழங்கியுள்ளது.
விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான 'ஜனநாயகன்' படத்துடன் இந்த கூட்டணி நிறைவடைந்துள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "'ஜனநாயகன்', 'லியோ', 'பீஸ்ட்', 'மாஸ்டர்', 'கத்தி' என உங்களுடன் இணைந்து பயணித்தது அற்புதமான மற்றும் உணர்வுபூர்வமான அனுபவமாக இருந்தது" என்று அனிருத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அளவற்ற நம்பிக்கையையும், என்றும் மறக்க முடியாத நினைவுகளையும் அளித்த விஜய் சாருக்கு நன்றி. அந்த இசை என்றென்றும் வாழும்" என்றும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே