சுவிட்சர்லாந்து என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது என்ன?

#Switzerland #Article #Mind #work #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
2 hours ago
சுவிட்சர்லாந்து என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது என்ன?

நிலையான வேலை, குறைந்த வேலை இழப்பு, வலுவான பொருளாதாரம். பல ஆண்டுகளாக இது உண்மையுமே. ஆனால் 2026க்குள் அந்த படம் கொஞ்சம் மாறலாம் என்ற சைகைகள் இப்போது தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளன

KOF பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் கணிப்புப்படி, தற்போது 2.9 சதவீதமாக இருக்கும் வேலை இழப்பு விகிதம் 3.2 சதவீதமாக உயரக் கூடும். 

சுவிஸ் தரத்தில் இது பெரிய அதிர்ச்சி அல்ல என்றாலும், “எப்போதும் பாதுகாப்பான வேலை சந்தை” என்ற எண்ணத்தில் இது ஒரு மாற்றம்.

இப்போது எந்த நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன என்று பார்ப்போம். காப்பீட்டு துறையில் Helvetia மற்றும் Baloise இணைந்த பிறகு, அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,400 முதல் 1,800 வேலைகள் வரை நீக்கப்படுகின்றன. 

இணைப்பு நடந்தால் செலவுக் குறைப்பு வரும் – அதுதான் இங்கும் நடக்கிறது. வங்கித் துறையில் UBS, உலகளவில் 10,000 பணியாளர்களை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்தில் மட்டும் சுமார் 3,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது. 

Credit Suisse-ஐ வாங்கியதன் பின்னர் அமைப்பு சீரமைப்பு இன்னும் தொடர்கிறது.

மருந்துத் துறையில் Novartis, 2027க்குள் 550 வேலைகளை குறைக்கிறது. பாசல் அருகிலுள்ள இரண்டு தொழிற்சாலைகள் இதனால் பாதிக்கப்படும். 

காரணம் என்ன? புதிய சிகிச்சை ஆராய்ச்சிகளில் முதலீடு செய்ய பணம் தேவைப்படுவது தேசிய ஒளிபரப்புக் கழகம் SRG கூட 900 வேலைகளை மூன்று ஆண்டுகளில் குறைக்கிறது. 

அரசின் ஊடக உரிமக் கட்டணக் குறைப்பு, விளம்பர வருவாய் வீழ்ச்சி – இவை அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. Galenica 170 வேலைகளை குறைக்கிறது. 

Tamedia 25–30 பணியிடங்களை நீக்குகிறது. IKEA தனது Spreitenbach தலைமையகத்தில் 60 நிர்வாகப் பணியிடங்களை குறைக்கலாம் என தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைப்புகளும் பாதுகாப்பாக இல்லை. ஜெனீவாவில் உள்ள UNICEF 300 வேலைகளை ரோமுக்கு மாற்றுகிறது. WHO 800 பணியாளர்களை குறைக்கிறது. 

அமெரிக்க நிதிக் கொள்கை மாற்றம் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது இவை அனைத்தும் அடுத்த மாதங்களில் பொருளாதார விவாதத்தின் மையமாக இருக்கும்.

சுருக்கமாக சொன்னால், வேலை சந்தை மாறிக்கொண்டிருக்கிறது. இது ஒரு தற்காலிக சீரமைப்பா? இல்லையெனில் நீண்டகால மாற்றத்தின் தொடக்கமா? அடுத்த ஆண்டு அதற்கான பதிலைத் தரும்..

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!