இன்று முதல் TIN இலக்கம் கட்டாயம் - உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!

#SriLanka #LANKA4 #Tin number #Inland Revenue Department
Thamilini
1 hour ago
இன்று முதல் TIN இலக்கம் கட்டாயம் - உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றைத் திறத்தல், கட்டிட வரைபடத்திற்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்தல் மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பித்தல் ஆகிய சந்தர்ப்பங்களில் TIN இலக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், காணியொன்றை அல்லது காணியின் உரிமத்தைப் பதிவுசெய்தல், வணிகத்தைப் பதிவுசெய்தல், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டையைப் (Credit Card) பெறுதல் ஆகிய சந்தர்ப்பங்களிலும் செல்லுபடியாகும் TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னர் TIN இலக்கம் செல்லுபடியானதுதானா என்பதைப் பொறுப்பான அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என உள்நாட்டு திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது.

TIN இலக்கத்தை இதுவரை பெறாத நபர்கள், உள்நாட்டு திறைசேரி திணைக்களத்தின் இ-சேவை (e-Services) மூலம் அதற்குப் பதிவுசெய்து கொள்ள முடியும் என்றும் அறியத்தரப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!