பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் ஹரிஷ் கல்யாண்

#Actor #TamilCinema #Movie #daughter #L4
Prasu
2 hours ago
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் ஹரிஷ் கல்யாண்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பார்க்கிங், லப்பர் பந்து போன்ற படங்கள் மூலம் வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், 2022ம் ஆண்டு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்த ஹரிஷ் கல்யாண் தனக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், "எனது மனைவி நர்மதாவிற்கும் எனக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

தாயும் சேயும் நலமாக உள்ளனர். எங்களது வாழ்வின் இந்த அழகான புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இவ்வேளையில், எங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் காட்டிய அன்பு மற்றும் ஆசிகளுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களது தொடர்ச்சியான ஆதரவிற்கும், கனிவிற்கும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் நமசிவாய" எனக் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!