புராதனப் பொருட்களைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!
#SriLanka
#ARREST
#Police
#Investigation
#LANKA4
#illegal
Mithra
17 minutes ago
தனியார் காணியொன்றில் புராதனப் பொருட்களைத் தேடும் நோக்கில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தும்மலசூரிய காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நவகட பிரதேசத்தில், காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அகழ்வாராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 56, 58, 64 மற்றும் 71 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தும்மலசூரிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.