தெற்காசியாவின் முன்னணி கிறிஸ்மஸ் சுற்றுலாத் தலமாக கொழும்பை மாற்றும் முயற்சி!

#SriLanka #Colombo #Event #LANKA4 #christmas #celebration
Mithra
12 minutes ago
தெற்காசியாவின் முன்னணி கிறிஸ்மஸ் சுற்றுலாத் தலமாக கொழும்பை மாற்றும் முயற்சி!

தெற்காசியாவின் முன்னணி கிறிஸ்மஸ் கொண்டாட்ட சுற்றுலாத் தலமாக கொழும்பை மாற்றும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘Colombo Christmas by Shero Presented by Homelands’ எனும் 18 நாள் கிறிஸ்மஸ் விழாவின் ஆரம்ப நிகழ்வு போர்ட் சிட்டி கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். Events by Shero நிறுவனத்தின் எண்ணக்கருவில், போர்ட் சிட்டி கொழும்பின் ஒத்துழைப்புடன் ABC Network நிறுவனத்தின் ஊடக அனுசரணையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் அலங்காரங்கள், கண்கவர் காட்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விற்பனை நிலையங்கள் மற்றும் பல்வேறு உணவு, பான வகைகள் எனப் பல்வேறு அம்சங்கள் இந்த விழாவில் இடம்பெறவுள்ளன.

குறிப்பாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள், இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் விடுமுறைக்காகத் தாயகம் திரும்பும் இலங்கையர்களை ஈர்ப்பது இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும்.

இந்த விழாவின் ஊடாக கொழும்பின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன், உள்ளூர் வர்த்தக நிறுவனங்களுக்கும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய அலங்காரக் கட்டமைப்புகள், மின்சாரச் சிக்கன LED விளக்குகள் மற்றும் கழிவுகளைத் தரம்பிரித்தல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளும் இதில் முன்னெடுக்கப்படவுள்ளன.

டிசம்பர் விடுமுறைக் காலத்தில் கொழும்பை முக்கிய சுற்றுலா ஈர்ப்பிடமாக நிலைநிறுத்தி, நகரின் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு புதிய அடையாளத்தை உருவாக்குவதே இந்த விழாவின் பிரதான இலக்காகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!