தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

#TamilCinema #LANKA4 #release #Vijay #ChiefMinister #danush #Movie #theaters #L4
Prasu
39 minutes ago
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து நவம்பர் 20 வெளியாகவுள்ள திரைப்படம் ஓம்.

வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் 6 மணி காட்சிக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு அரசுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது.

அத்தகைய திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான்.

வரும் நவம்பர் 20ம் தேதி வெளியாகவிருக்கும்‘ஓம்’ திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!