செல்வராசா கஜேந்திரனுக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு
#Police
#Investigation
#LANKA4
#memorial
#L4
Prasu
39 minutes ago
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களுக்கு, கோப்பாய் பகுதியில் மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமை தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாஇன்று காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் உரிமையை முன்னெடுத்தமைக்காக அரசியல் செயற்பாட்டாளர்கள் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்படுவது ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளது.