எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க கர்நாடக இசை பயிலும் ராஷ்மிகா!

#Actress #TamilCinema #LANKA4 #Movie #Singer #historic #L4
Prasu
19 minutes ago
எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க கர்நாடக இசை பயிலும் ராஷ்மிகா!

இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா தற்போது பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கர்நாடக இசையின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி இசைத்துறையில் சாதனை படைத்தார். தொடர்ந்து திரையுலகிலும் கால்பதித்த அவர், 'சேவாசதனம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இசைத்துறையில், 1954ம் ஆண்டு பத்மபூஷண் விருதும் 1968ம் ஆண்டு சங்கீத கலாநிதி விருதும் 1998ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் பெற்றார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 'ஜெர்ஸி', 'கிங்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிப்பதற்காக ராஷ்மிகா மந்தனா முறைப்படி கர்நாடக இசை கற்கத் தொடங்கியுள்ளார்.

பாடுவது தனக்கு முற்றிலும் புதிய அனுபவம் என்றாலும், நடிப்பின் மூலம் மட்டுமே அந்தக் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தாமல், எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையாரின் இசை வடிவத்தையும் உண்மையாகக் கற்றுக்கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!