அமெரிக்க நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கனடிய பிரதமர் மார்க் கார்னி
#PrimeMinister
#Canada
#America
#Greenland
Prasu
3 hours ago
அமெரிக்க அரசாங்கத்தின் கிரீன்லாந்து மீதான நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்பதாக கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்து மீதான அமெரிக்க வரிகளை கடுமையாக எதிர்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நெரு்கடியான தருணத்தில் கிரீன்லாந்துக்கு கனடா ஆதரவாக துணை நிற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அழுத்தம் மற்றும் வரிகளை மூலமாகப் பயன்படுத்துவது குறித்து தெளிவான செய்தி அளித்தாலும், அமெரிக்கா அல்லது அமெரிக்க ஜனாதிபதியை கார்னி நேரடியாக குறிப்பிடவில்லை.
(வீடியோ இங்கே )