வங்கதேசத்தில் இருந்து இலங்கை வந்த நிவாரண பொருட்கள்
#SriLanka
#Death
#government
#Bangladesh
#Disaster
Prasu
1 hour ago
இலங்கையில் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து பங்களாதேஷ் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
பங்களாதேஷ் விமானப்படைக்குச் சொந்தமான C-130 ரக விமானம் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கையை வந்தடைந்தது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி மயூரி பெரேரா இந்த நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிவாரணப் பொருட்களில் கொசு வலைகள்: 1,000, உணவுப் பொதிகள்: 500, கூடாரங்கள்: 10, அத்தியாவசிய மருந்துகள்: 125 பெட்டிகள், டார்ச் லைட்டுகள், கம் பூட்ஸ், பாதுகாப்பு மேலுறைகள், கையுறைகள் மற்றும் தொப்பிகள் அடங்கும்.
(வீடியோ இங்கே )