காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் ஆரம்பம்
#Flight
#Malasia
#search
#Missing
Prasu
1 hour ago
2014ம் ஆண்டு காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370ஐ தேடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மலேசிய போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களை ஏற்றிச் சென்ற போயிங் 777 விமானம் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் மாயமானது.ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக விமானம் குறித்த மர்மம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இந்த விமானத்தை கண்டுப்பிடிப்பதற்கான முயற்சிகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓஷன் இன்ஃபினிட்டி (Ocean Infinity) தெற்கு இந்தியப் பெருங்கடலில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்காக 55 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )