வீட்டின் மேல் கூரையில் இரவைக் கழித்த குடும்பங்கள்! சீரற்ற வானிலையால் அவலம்
#SriLanka
Mayoorikka
1 hour ago
இலங்கைக்கு அருகில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, டிட்வா புயலாக மாறியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பெரு மழை பெய்து வருகிறது.
இந்த பெருமழையில் கண்டி மாவட்டத்தின் கம்பளை பகுதியே அதிகமான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில், கம்பளையில் சில குடியிருப்பாளர்கள் நேற்று இரவு முழுவதும கூரையில் ஏறியிருந்து இரவை கழித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வீட்டுக்குள் நீர் புகுந்து நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, கூரை மீது ஏறியிருந்துள்ளனர். கொட்டும் மழைக்குள் குடையை பிடித்தபடி இரவை கழித்துள்ளனர்.
சுமார் 15 பேர் வரை அருகருகான வீட்டு கூரைகளில் இருந்துள்ளனர்.
ஒரு குடும்பத்தினர் இன்று காலையில் இந்த காட்சியை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை தொடர்ந்து, இந்த காட்சி வைரலாகியுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
