இலங்கைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை ! - அவசர அறிவிப்பு – காலை 5.00 மணிக்கு வெளியீடு
இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான வானிலையியல் சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகபட்ச மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் சில மாகாணங்களில் 200 மில்லிமீற்றரை மீறும் மிக கன மழை பெய்யும் என்றும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் பலத்த காற்றும் சில மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்றடிக்கும் அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல இடங்களில் உயர் அபாய நிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* திடீர் வெள்ளப்பெருக்கு
* நிலச்சரிவு
* மரங்கள் சாய்வது/வீழ்வது
* கடல் பகுதிகளில் மிகவும் கடுமையான அலை ஏற்கனவே பதிவான மிக கன மழை அளவுகள்
* வவுனியா - செடிக்குளம் – 315 மிமீ
* முல்லைத்தீவு, அலம்பில் – 305 மிமீ
* கண்டி – 223.9 மிமீ
* மன்னார், மடு – 218.5 மிமீ
* இரத்தினபுரி – 208 மிமீ
பொது மக்களுக்கு அறிவுறுத்தல்
* அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் * அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும்
* வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்
(வீடியோ இங்கே )
அனுசரணை
