கொட்டும் மழையிலும் தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஷ்டிப்பு!

#SriLanka #Kilinochchi
Mayoorikka
1 hour ago
கொட்டும் மழையிலும் தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஷ்டிப்பு!

தாயகத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் வடக்கு மக்கள் மாவீரர் நினைவேந்தல் அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகின்றது. 

 கொட்டும் மழையிலும் மக்கள், மீண்டும் தன்னெழுச்சியாக மாவீரர் நினைவாலயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்.

 மாவீரர்களின் நினைவுநாள் இன்று தமிழர்கள் மத்தியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அதேநேரம், நாட்டின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடுமையான காலநிலை நிலவி வருகின்றது.

 வன்னி - விளாங்குளம் வன்னி - விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு, மாவீரர் தின ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

 அதேவேளை, முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு, மாவீரர் தின ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை