அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு மில்லியன் இழப்பீடு!
#SriLanka
#ADDA
Thamilini
1 hour ago
வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட கனமழையால் ஏற்பட்ட சமீபத்திய அவசர பேரிடர் சூழ்நிலையால் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி நிதியத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பணம் விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.