நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைப்பு!
                                                        #SriLanka
                                                    
                                            
                                    Mayoorikka
                                    
                            
                                        7 hours ago
                                    
                                 
                மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த விலைத் திருத்தத்தின்படி, இரண்டு பிரதான எரிபொருள் வகைகளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 294 ரூபாவாகும்.
அதேபோல், லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.
 ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றுமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                    
 
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            