உக்ரைனில் உடனடி போர் நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா!

உக்ரைனில் உடனடி போர் நிறுத்தத்தை மாஸ்கோ நிராகரித்துள்ளது. இது ட்ரம்பின் முயற்சிகளுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே திட்டமிடப்பட்ட உச்சிமாநாடு நேற்று (21.10) நடைபெற இருந்த நிலையில், குறித்த மாநாடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் "பயனுள்ள அழைப்பை" மேற்கொண்ட போதிலும், இருநாட்டு தலைவர்களும் சந்திப்பதற்கான திட்டங்கள் இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தானும் புதினும் விரைவில் ஹங்கேரியில் சந்திப்போம் என்று டிரம்ப் கடந்த வாரம் அறிவித்திருந்தார். ஆனால், சலுகைகளை பரிசீலிக்க புதின் விரும்பவில்லை தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் போர் நிறுத்த பேச்சுவார்தைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
(வீடியோ இங்கே )
அனுசரணை



