அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவரை திரும்பப் பெற்ற வெள்ளை மாளிகை!
“அமெரிக்கா ஃபர்ஸ்ட்” கொள்கைக்கு முழுமையாக ஒத்துழைக்கும் வகையில் இராஜதந்திரக் கட்டமைப்பை மாற்றியமைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் (Julie Chung) உட்பட சுமார் 30 நாடுகளின் சிரேஷ்ட தூதர்களைத் திரும்பப் பெற வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி மாதத்துடன் இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட இவர்களை நீக்கிவிட்டு, ட்ரம்ப்பின் கொள்கைகளை உலகெங்கும் தீவிரமாக முன்னெடுக்கும் புதிய அதிகாரிகளை நியமிக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தூதர்கள் மாற்றத்தினால் ஆப்பிரிக்க கண்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆசியாவில் இலங்கை, நேபாளம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆறு நாடுகள் இந்த மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்தத் திடீர் இடமாற்றம் இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், இது ஒரு சாதாரண நிர்வாக நடைமுறை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
